Entertainment
27 வருடங்களை நெருங்கிய புதிய மன்னர்கள் திரைப்படம்
புது வசந்தம், கோகுலம் என வித்தியாசமான குடும்ப பாங்கான படங்களை இயக்கியவர் விக்ரமன். இத்தகைய கதைகளாலேதான் இவர் சினிமாவில் அறியப்பட்டார். அந்த விக்ரமன் இயக்கிய படம்தான் புதிய மன்னர்கள்.
இந்த படம் ஆரம்பத்தில் சினிமாவில் முன்னேறுவதற்கு முன் நடிகர் விக்ரம் நடித்த படமாகும்.
நன்றாக முன்னேறி வந்து கொண்டிருந்த விக்ரமனுக்கு இப்படம் ஒரு சறுக்கலாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் இன்னொரு வித்தியாசமான விசயம் என்னவென்றால் எஸ்.ஏ ராஜ்குமார், சிற்பி போன்றவர்களின் இசையில் மட்டுமே படம் இயக்கிய விக்ரமன் முதன் முறையாக ஏ.ஆர் ரஹ்மான் அவர்களுடன் சேர்ந்து பணியாற்றினார்.
படத்தின் பாடல்கள் ஹிட் ஆனது மட்டுமே இப்படத்தின் ப்ளஸ் ஆக இருந்தது. இப்படம் வெளியாகி இன்றுடன் 27 வருடங்கள் ஆகின்றனவாம்.
