26வது வருடத்தில் கமலின் இந்தியன் திரைப்படம்

26வது வருடத்தில் கமலின் இந்தியன் திரைப்படம்

ஏ.எம் ரத்னம் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இந்தியன். இதில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, கவுண்டமணி, செந்தில், கிரேஸி மோகன், கஸ்தூரி, சுகன்யா, நெடுமுடி வேணு மற்றும் பலரானோர் நடித்திருந்தனர்.

கமல்ஹாசன் தனது நடிப்பில் மிக வித்தியாசமான கதாபாத்திரம் செய்த படங்களில் இதுவும் ஒன்று. தந்தை மகன் என இரு கதாபாத்திரத்தில் கமல் இப்படத்தில் நடித்திருந்தார். தந்தை கதாபாத்திரமான சுதந்திர போராட்ட வீரரான சேனாபதி கதாபாத்திரம் அனைவரையும் வியப்படைய செய்தது.

லஞ்சத்துக்கு எதிராக கமல் தனி ஒரு ஆளாக போராடுவதும், லஞ்சம் வாங்கும் அனைவரையும் கொலை செய்வது என கமல் அதகளப்படுத்தி இருந்தார்.

கமல் தந்தை மகனாக இரு வேடங்களில் இப்படத்தில் கலக்கி இருந்தார்.

ஜென் டில் மேன் படத்துக்கு பிறகு இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது அதிரடி படம் இது. இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருந்தார். இப்படம் வெளிவந்து இன்றுடன் 26 வருடங்களை நெருங்குகிறது.