Entertainment
வெள்ளிவிழா ஆண்டை எட்டிய யுவன் ஷங்கர் ராஜா- நடிகர் கார்த்தியின் பாராட்டும் நெகிழ்ச்சியும்
இசையமைப்பாளர் இளையராஜாவின் புதல்வர் யுவன் ஷங்கர் ராஜா . சமீபத்தில் வலிமை படம் வரை யுவனின் இசை பெரிய சரித்திரத்தையே கடந்த 25 ஆண்டுகளாக படைத்துள்ளது.
கடந்த 1997ல் அரவிந்தன் படம் மூலம் தமிழுக்கு இசையமைக்க வந்தவர் யுவன்.
அதன் பின் இசைத்துறையில் பல மைல் கற்களை இவர் எட்டி விட்டார். யுவனின் இசைக்கு இளைஞர்களிடையே மவுசு அதிகமாகும்.
இந்த நிலையில் யுவனின் 25 வருட வளர்ச்சிக்கு நடிகர் கார்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். யுவனை பள்ளி நாட்களில் இருந்தே தெரியும் இந்த அற்புதமான வளர்ச்சியை பார்ப்பதற்கு சந்தோஷம் எனது பயணத்தையும் இரவுகளையும் யுவனின் இசை மறக்க முடியாததாக்கி இருந்தது என கார்த்தி தெரிவித்துள்ளார்.
