வெள்ளிவிழா கண்ட முத்து- கவிதாலயா நிறுவனம் பெருமிதம்

வெள்ளிவிழா கண்ட முத்து- கவிதாலயா நிறுவனம் பெருமிதம்

கடந்த 1995ம் ஆண்டு தீபாவளி திருநாள் வெளியீடாக அந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி வெளியான திரைப்படம் முத்து.இந்த படத்தில் ரஜினிகாந்த், மீனா, சரத்பாபு, வடிவேலு, செந்தில், விசித்ரா, ராதாரவி, காந்திமதி என மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. கே.எஸ் ரவிக்குமார் இயக்கினார். அதற்கு முந்தைய வருடம் கே.எஸ் ரவிக்குமார் இயக்கிய நாட்டாமை திரைப்படம் தீபாவளிக்கு வந்தது அந்த திரைப்படம் கே.எஸ் ரவிக்குமாருக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்து ஏற்படுத்தி கொடுத்தது அதன் மூலம் ரஜினியை இயக்கும் வாய்ப்பும் ரவிக்குமாருக்கு வந்தது.

இந்த படத்துக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருந்தது.

தந்தை மகன் என இரு வேடங்களில் ரஜினி நடித்திருந்தார். தில்லானா தில்லானா உட்பட அனைத்து பாடல்களும் ப்ளாக் பஸ்டர் பாடல்களாக இருந்தன.

சாதாரண மசாலா டைப் கதைதான் இருப்பினும் ரஜினி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இப்படம் தமிழில் மட்டுமல்லாது ஜப்பானிய மொழியில் கூட டப் செய்யப்பட்டு டான்ஸிங் மஹராஜ் என பெயரிடப்பட்டு அந்த நாட்டில் பெரிய வெற்றி பெற்று ஜப்பானிலும் ரஜினிகாந்த் எல்லோருக்கும் தெரிந்த ஸ்டார் ஆனார்.

இப்படம் வந்து 25 வருடங்கள் ஆனதை ஒட்டி கவிதாலயா நிறுவனம் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளது.