கடந்த 1995 அக்டோபர் 24ம் தேதி வெளியானது குருதிப்புனல் திரைப்படம். புதிய புதிய இயக்குனர்கள் வித்தியாசமான கலைஞர்களுடன் பணிபுரிவது கமலின் வாடிக்கையான விசயம். அந்த வகையில் இந்த படத்தில் கமல் சேர்ந்தது ஒளிப்பதிவாளரான பிசி ஸ்ரீராம் அவர்களுடன். பிசி ஸ்ரீராம் ஏற்கனவே மீரா படத்தை இயக்கி இருந்தார். ஒளிப்பதிவாளரான இவர் இயக்குனராக முதல் படத்தில் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் இரண்டாவது படத்தில் கலக்கி விட்டார்.
ஏற்கனவே கமலுடன் நாயகன், அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன் படத்திற்கு ஒளிப்பதிவாளராக வேலை செய்தவர் பிசி ஸ்ரீராம். கமலுக்கும் இவருக்கும் நல்ல ஒரு கெமிஸ்ட்ரி உண்டு அந்த கெமிஸ்ட்ரி பிசி ஸ்ரீராம் இயக்குனராக வேலை செய்த இந்த படத்துக்கு நல்ல ஒர்க் அவுட் ஆனது.
இப்படத்தில் அர்ஜூனுடன் கமல் இணைந்து நடித்தார். போலீஸ் அதிகாரி வேடத்தில் இருவரும் நடித்திருந்தனர். நல்லதொரு ஸ்டைலிஷ் படமாக கமல் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக இது அமைந்திருந்தது.