Connect with us

தமிழகத்தில் இருந்து திருப்பி அனுப்பப்படும் ரேபிட் டெஸ்ட் கிட்கள்! அதிரடி முடிவு!

corona

Corona (Covid-19)

தமிழகத்தில் இருந்து திருப்பி அனுப்பப்படும் ரேபிட் டெஸ்ட் கிட்கள்! அதிரடி முடிவு!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் கிட்களின் தரம் கம்மியாக இருப்பதாக சர்ச்சைகள் கிளம்பிய நிலையில் இப்போது அந்த கிட்கள் திருப்பி அனுப்பப்படும் என சொல்லப்படுகிறது.

கொரோனா சோதனைகளை துரிதப்படுத்தி அரைமணி நேரத்தில் முடிவுகளை அறிந்து கொள்ளும் வகையில் சீனாவில் இருந்து பல லட்சக்கணக்கான ரேபிட் கிட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் அவற்றின் சோதனை முடிவுகள் வேறுபாடாக அமைந்ததால் கடந்த சில நாட்களாக அவற்றைப் பயன்படுத்தாமல் நிறுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் ரேபிட் டெஸ்ட் கருவிகளுக்கு பதிலாக RT-PCR டெஸ்ட் கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தியது.

இதையடுத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளதாவது:-

ஐ.சி.எம்.ஆர் ஆணையின்படி தமிழக அரசு பெற்றுள்ள 24 ஆயிரம் ரேபிட்ல் டெஸ்ட் கிட்கள் திருப்பி அனுப்பப்படுகிறது. இதில் தமிழக அரசுக்கு எந்தவித செலவும் ஏற்படவில்லை. மேலும் மீதமுள்ள அனைத்து கொள்முதல் ஆணைகளும் ரத்து செய்யப்படுகிறது  என தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுச்சொத்தான கருவூலத்தை கரையான் அரிக்கும் காரியம் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பது ஒரு பொய்பிரசாரத்தின் வெளிப்பாடு. மக்களின் உயிர்காக்கும் அரசை பார்த்து ரூ.600 கொடுக்காதது ஏன் எனக் கேட்டுள்ளது ஏன் எனக் கேட்டுள்ளார். இதுபோன்ற குற்றச்சாட்டுகளை திமுகம் தலைவர் விட்டுவிட வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாருங்க:  தமிழகத்தில் மே 3 வரை ஊரடங்கு நீடிக்கும்! முதல்வர் அதிரடி!

More in Corona (Covid-19)

To Top