புதுச்சேரியில் தடையை மீறி மதுபானம் விற்ற 22 கடைகளுக்கு சீல் மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் உரிமத்தை ரத்து செய்துள்ளனர்.
உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 20,00,000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் 11,00 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 300 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் வைரஸ் பரவல், கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1204 ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நேற்று நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் நாடெங்கும் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு 22 நாட்கள் முடிந்துள்ளது.
ஆனால் ஆங்காங்கே தடையையும் மீறி திருட்டுத்தனமாக மதுபானம் விற்கப்படுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பாண்டிச்சேரியில் கள்ளத்தனமாக மதுபானங்கள் பல மடங்கு விலை உயர்த்தி விற்கப்பட்டு வருகின்றன. இது சம்மந்தமாக வந்த புகார்களை அடுத்து அதுபோல விற்பனை செய்த கடைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன.
ஆனால் அப்படி சீல் வைக்கப்பட்ட கடைகளில் இருந்தும் மதுபானங்களை திருட்டுத்தனமாக எடுத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக மாவட்ட ஆட்சியர் அருணுக்குப் புகார் வந்தது. இதையடுத்து அவர் காவல்துறையினருடன் இணைந்து நடத்திய சோதனையில் தடையை மீறி மதுபானம் விற்பனை செய்த 23 கடைகளின் உரிமத்தை ரத்து செய்துள்ளார்.