Latest News
இந்தியாவிலேயே 21 வயது பெண் முதல் முறையாக மேயராக தேர்வு- திருவனந்தபுரம் மேயராக தேர்வு செய்யப்படுகிறார்
கேரள மாநிலத்தில் சமீபத்தில்தான் உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தது. இத்தேர்தல் முடிவுகளில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பெரும்பான்மையான இடங்களில் வென்ற நிலையில்
தற்போது இதில் வென்ற அனைவரும் பதவி ஏற்று வருகின்றனர் அந்த வகையில் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக, முடவன்முகல் வார்டு கவுன்சிலர் ஆர்யா ராஜேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இதில் ஆச்சர்யம் என்னவென்றால் வெறும் 21 வயதுதான் இவருக்கு ஆகிறது இவரையே புதிய மேயராக சி.பி.எம் கட்சி அறிவித்துள்ளது.
இவர் இங்குள்ள ஆல் செயிண்ட்ஸ் கல்லூரியில் பி.எஸ்சி., கணிதம் படித்துள்ளார். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே இருந்தே, கம்ப்யூனிஸ்ட் கட்சி சார்ந்த மாணவர் குழுக்கள் பலவற்றுக்கு தலைவராக இருந்துள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தலில் வென்று மேயராக பொறுப்பேற்க உள்ள ஆர்யா ராஜேந்திரன்,முதல் முறையாக இந்தியாவின் இளம் மேயர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.