Published
10 months agoon
திருவாரூர் மாவட்டம் கோம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரண்ராஜ்(21). இவர், 2021-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், திருவாரூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சரண்ராஜை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர், பிணையில் வெளியே வந்த சரண்ராஜ், திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி ஜெயக்குமார் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில், குற்றம்சாட்டப்பட்ட சரண்ராஜுக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.