21 தொகுதி இடைத்தேர்தல் ரஜினிகாந்த் போட்டியில்லை!

21 தொகுதி இடைத்தேர்தல்; ரஜினிகாந்த் போட்டியில்லை!

நாடாளுமன்ற, மக்களவை தேர்தலில் ரஜினிகாந்த் போட்டியிடவில்லை என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

சட்டப்பேரவை தேர்தல் தான் தம் இலக்கு எனவும், தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் கட்சிகளுக்கு மக்கள் வாக்கு அளிக்க வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார். இதனால், 21 தொகுதிகள் கொண்ட சட்டப்பேரவை தேர்தலில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாயாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், 21 தொகுதி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்தார்.தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் கட்சி என்று சொன்னீர்களே, மத்திய கட்சியா? மாநில கட்சியா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, 2 கட்சியும் தான் என்று சொல்லிவிட்டு சென்றார்.