பாட்டாளி மக்கள் கட்சியை டாக்டர் ராமதாஸ் தொடங்கி 35 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. ஆனால் அவர்களின் அரசியல் , சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர்.ராணிப்பேட்டை, திருப்பத்தூர், பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரி இதை ஒட்டிய வட மாவட்ட பகுதிகளில் மட்டும்தான் இவரது அரசியல் உள்ளது.
இதை தாண்டிய வளர்ச்சி என்பது இந்த கட்சிக்கு இல்லை. மேலும் இந்த கட்சி மத்திய மாவட்டங்களில் லேசாக பரவியுள்ளது. தென் மாவட்டங்களில் இந்த கட்சி தன்னுடைய வேரை ஆழமாக பரப்பவில்லை.
இதனிடையே கடந்த 2015ல் மாற்றம் அன்புமணி என்ற தலைப்பில் எல்லாம் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அடிக்கடி முதல்வர் ஆசையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று நடந்த கூட்டத்தில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் ராமதாஸ் கூறியதாவது, நாம் கட்சி தொடங்கி 35 வருடங்களாகிறது.2026ல் நாம்தான் முதல்வர் மக்கள் அதனை உறுதி செய்து விட்டார்கள் என ராமதாஸ் கூறியுள்ளார்.