2020ம் ஆண்டு அதிகமாக டுவிட் செய்யப்பட்ட நடிகர் யார் என விஜய் ரசிகர்களிடமோ, அஜீத் ரசிகர்களிடமோ கேட்டால், தளபதிதான் என்றும் தல தான் என்றும் பதில் சொல்வார்கள்.
ஆனால் உண்மையில் தென் மாநில அளவில் அதிகம் டுவிட் செய்யப்பட்ட நடிகர் மகேஷ்பாபு தானாம்.
பிரின்ஸ் மகேஷ்பாபு என அழைக்கப்படும் இவரின் படங்கள் ஒவ்வொன்றும் புஜபல பராக்கிரமத்துடன் அதிரடியாக இருக்கும் என்பதால் இவருக்கு ரசிகர்கள் அதிகம் உண்டு.
இதனால் நம்ம ஊர் அஜீத், விஜயை விட ஆந்திர ரசிகர்கள் இவரது பெயரை அதிக முறை டுவிட் செய்து ஹிட் ஆக்கியுள்ளனர்.