2019 தேர்தல் முன்னெச்சரிக்கை; டாஸ்மார்க் கடைகள் மூடப்படும்!

393

தமிழகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதை தொடர்ந்து, தேர்தல் நாள் மற்றும் அதற்கு முன்னால் இரண்டு நாட்கள், மற்றும் வாக்கு எண்ணிக்கை நாள் அன்று, மதுபானக் கடைகள் மூடப்படும்.

அதாவது ஏப்ரல் 16, 17 மற்றும் தேர்தல் நாளான ஏப்ரல் 18 மற்றும் வாக்கு எண்ணிக்கையான மே 23ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என டாஸ்மார்க் மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ் குமார் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.வாக்குப்பதிவு வரை 2 நாட்கள் மதுபான கடை மூடப்படும் எனவும், வாக்கு எண்ணிக்கை நாளான அன்றும் மதுபான கடைகள் மூடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை பொது மக்கள் அனைவரும் வரவேற்று வருகின்றனர்.

பாருங்க:  சவுரவ் கங்குலிக்கு நெஞ்சு வலி