2019 திமுக தேர்தல் அறிக்கை – ஸ்டாலின் வெளியிடு

397

மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்.

2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் அறிக்கையை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் வெளியிட்டார்.

1. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகத்தில் இணை ஆட்சி மொழியாக தமிழை அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

2. வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

 3. மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வு ஊதியம் திட்டம் அமலுக்கு வரும்.

4. குறைந்தபட்ச ஊதியம் 8000ஆக நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

5. பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தில் பழைய நடைமுறை கொண்டுவரப்படும்.

6. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முறை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

7. மாணவர்களுக்கான கல்வி கடன் முழுமையாக ரத்து செய்யப்படும்..

8. தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடுமுறையை அமல்படுத்த

9. சிலிண்டர் மானியம் வங்கியில் செலுத்தப்படுவதை நிறுத்தப்பட்டு, சிலிண்டர் விலை குறைக்கப்படும்.

10. கேபிள் டிவிக்கான கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

11. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட  நடவடிக்கை

12. புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் நிறந்திர வீடு கட்டித்தர நடவடிக்கை.

13. ஏழை நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம்.

14. 10ம் வகுப்பு முடித்த 50 லட்சம் பேர் மக்கள் நலப் பணியாளர்களாக நியமுக்கப்படுவர்.

15. மாணவர்களுக்கு ரயிலில் இலவச பயண சலுகை.

பாருங்க:  கேவலமாக பேசிய திருமாவளவனை எப்படி அண்ணன் என அழைக்க முடியும்- குஷ்பு கோபம்

16. பெண்களுக்கு தொழில் தொடங்க ரூ.50000 வரை வட்டியில்லா கடன்.

17. ராஜீவ் காந்தி கொளை வழக்கு ஏழு பேர் விடுதலைக்கு  நடவடிக்கை.

18. சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை.

19. பாலியல் குற்றங்களை தடுக்க உரிய சட்டம் கொண்டு வரப்படும்.

20. சுங்க சாவடிகளில் டெண்டர் முடிந்த பிறகும் வசூலிக்கப்பட்டு வரும் கட்டணம் ரத்து செய்யப்படும்.