அதிமுக தேர்தல் அறிக்கை - ஓ.பி.எஸ் வெளியிடு

2019 அதிமுக தேர்தல் அறிக்கை – ஓ.பி.எஸ் வெளியிடு

தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அதிமுகதேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.

1. அம்மா தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளமக்களுக்கு மாதாந்திர உதவி தொகை ரூ. 1500 வழங்கப்படும்.

2. வறுமையில் உள்ள நிலமற்ற விவசாய தொழிலாளர்கள், மாற்றுத் திரனாலிகள் ரூ.1500 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

3. பிலிப்பைன்ஸ் நாட்டை முன்மாதிரியாக கொண்டு எம்.ஜி.ஆர் தேசிய திறன் மேம்பாடு திட்டம் அமைக்கப்படும்.

4. காவேரி கோதாவரி திட்டத்தை மேம்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

5. மாணவர்களுக்கான கல்வி கடன் முழுமையாக ரத்து செய்யப்படும்..

6. கடலில் வீணாக நீர் கலப்பதை  தடுக்க நடவடிக்கை.    

7. நீட் தேர்வு முறை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

8. தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

9. கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கைஎடுக்கப்படும்.

10. இலங்கை படுகொலை விவகாரத்தில் சர்வதேச விசாரணை நடத்த வலியுரத்தப்படும்.

11. பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

12. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த கூடாது என வலியுறுத்தப்படும்.

13. தமிழ் மொழியை மத்திய அரசு அலுவலகங்களில் அலுவல் மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

14. காவிரி டெல்டாவை பாதிக்கப்பட்ட வேளாண் மண்டலாமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

15. புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கிடைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.