Latest News
நான் இருநூறு வருசம் வாழப்பேறேன் – ட்ரோல் பண்றவன் பண்ணிட்டே இரு- நித்யானந்தா அதிரடி
சாமியார் நித்யானந்தா குறித்த சர்ச்சையாக இரண்டு தினங்களுக்கு முன் அவர் இறந்து விட்டதாக தகவல் பரவியது. கைலாசா நாட்டில் வசித்து வருவதாக கூறப்படும் நித்யானந்தா, இது குறித்து நேற்று முன் தினமே தான் இறக்கவில்லை என்றும் தான் சமாதி நிலையில் இருந்து பார்த்ததாகவும் தனக்கு என்ன வியாதி என்றே தெரியவில்லை மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் கைலாசாவில் இருந்து இன்று ஒரு வீடியோவை நித்யானந்தா வெளியிட்டுள்ளார். நீ என்ன நினைச்சாலும் சரி நான் 200 வருசம் வாழப்போறேன், நீ ட்ரோல் பண்றவன் பண்ணிட்டே இரு ஆனால் உன் 5வது தலைமுறை ட்ரோல் பண்றத பார்க்க நீ இருக்க மாட்ட நான் அந்த ட்ரோலையும் பார்த்துகொண்டிருப்பேன் என அதிரடியாக கூறியுள்ளார்.