Corona (Covid-19)
20 பேர் பத்தாது, குறைந்தது 50 பேர் தேவை – வேண்டுகோளை நிறைவேற்றிய தமிழக அரசு!
கொரொனா வைரஸ் காரணமாக, இந்தியாவில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. இதனையடுத்து அனைத்து மாநில எல்லைகள், கடைகள், திரையரங்கள், கல்வி நிலையில்கள், வழிபாட்டு தளங்கள் என அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது.
இதில், சினிமா படப்பிடிப்புகள், சீரியல் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தொலைக்காட்சி சேனல்களில் பழைய சீரியல், திரைப்படங்கள் என ஒளிப்பரப்பி வருகின்றனர். இதனால் திரைப்படம் மற்றும் சீரியலில் பணியாற்றும் அமைப்புசாரா தொழிலாளிகள் பலரும் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனையடுத்து, சின்னத்திரை படப்பிடிப்பை மீண்டும் துவங்குவதற்கு அனுமதி கேட்டு தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசும் இந்த கோரிக்கையை ஏற்று கடந்த 22ஆம் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள் நடந்த அனுமதியளித்தது, ஆனால் 20 நபர்கள் மட்டுமே படப்பிடிப்பு தளத்தில் இருக்க வேண்டும், தடை செய்யப்பட்ட பகுதிகள், பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது; ஊரக பகுதிகளில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் 20 பேர் பத்தாது குறைந்தது 50 பேர் தேவை என சின்னத்திரை சங்கத்தின் சார்பாக வேண்டுகோள் வைக்கப்பட்டது.
இதனை பரிசிலித்த தமிழக அரசு, நாளை முதல் ஆதாவது மே31 தேதி முதல் 60 பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்தலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், சென்னையில் படப்பிடிப்பு நடத்த மாநகராட்சி ஆணையரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் மற்ற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்த ஆட்சியர்களிடம் அனுமதி பெற்று நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.