மிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 20 மாவட்டங்களை ஹாட்ஸ்பாட் மாவட்டங்களாக அறிவித்துள்ளது மத்திய அரசு.
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவேகமாக பரவி வரும் நிலையில் வைரஸ் பாதிப்புக்கு ஏற்றவாறு இந்தியா முழுவதும் உள்ள மாவட்டங்களை தனித்தனியாக பிரித்துள்ளது மத்திய அரசு. இதன் படி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் மாவட்டங்களில் இடம்பெற்றுள்ளன. அவை சென்னை, திருச்சி, விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர், திருவாரூர், சேலம், நாகை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் ஊரடங்கு சற்று தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.