Corona (Covid-19)
2 டிஜி கொரோனா மருந்து எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்
2 டிஜி என்ற கொரோனா மருந்தை ஐசிஎம் ஆர் மற்றும் ரெட்டிஸ் லேபரேட்டரிஸும் இணைந்து கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்து குளுக்கோஸ் டைப்பில் உள்ளது இந்த மருந்தை கரைத்து கொடுத்தால் இயல்பாக கொரோனா நோயாளிகள் குணமாகின்றனர் என கூறப்படுகிறது.
இந்த மருந்து முழுமையாக இன்னும் கடைகளுக்கு வரவில்லை முதல்கட்டமாக 10000 பாக்கெட்டுகள்தான் தயார் செய்யப்பட்டு சில நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த மருந்து விரைவில் விற்பனைக்கு வருமென்றும் இதன் விலை 990 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீரில் கலந்து குடிக்கும் 2DG மருந்தை கருவுற்ற பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தரக்கூடாது என்று ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அறிவித்துள்ளது. யாருக்கெல்லாம் தர வேண்டும் என்பது குறித்து வழிகாட்டுதல்களை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் கருவுற்ற பெண்கள் பாலூட்டும் தாய்மார்கள் போன்றோருக்கு வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோயாளிகள், மாரடைப்பு, கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கும் 2DG மருந்து தர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிதமான மற்றும் தீவிர பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு அதிகபட்சமாக 10 நாட்கள் வரை மட்டுமே வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.