Connect with us

2 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் – 3 விமானிகள் கைது

2 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் - 3 விமானிகள் கைது

Tamil Flash News

2 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் – 3 விமானிகள் கைது

சமீபத்தில் இந்திய நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவிற்கு சொந்தமான இரு போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியுள்ளது.

ஜம்மு – காஷ்மீர் பகுதியில் புல்வாமா பகுதியில், பாகிஸ்தான் நாட்டிற்குள் செயல்படும் ஜெய்ஸ் இ முகம்மது தீவிரவாத இயக்கத்தை தீவிரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகினர். இது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஸ் இ முகம்மது இயக்கத்தி முகாம்களை இந்திய ராணுவம் குண்டு வீசி அழித்தது. இதற்கு நாடெங்கும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த 2 இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. இதில், 2 இந்திய விமானப்படை விமானிகள் பலியாகிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், 3 வீரர்களை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

More in Tamil Flash News

To Top