Singer Ramya

2வது திருமணம் செய்த பிக்பாஸ் போட்டியாளர் – வாழ்த்திய பிரபலங்கள்

பிக்பாஸ் தமிழ் சீசன் 2வில் கலந்து கொண்ட பாடகி ரம்யா சின்னத்திரை நடிகரை 2வது திருமணம் செய்துள்ளார்.

மறைந்த பழம்பெரும் நடிகரின் பேத்தியும், பாடகியுமான ரம்யா ஏற்கனவே திருமனம் ஆனவர். பாடகர் அர்ஜுனை இவர் திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு அவரிடமிருந்து பிரிந்தார். அதன்பின் தமிழ் பிக்பாஸ் சீசன் 2விலும் கலந்து கொண்டார்.

Singer Ramya

இந்நிலையில், சின்னத்திரை நடிகர் சத்யாவை அவர் தற்போது 2வது திருமனம் செய்துள்ளார். இவரின் திருமணத்திற்கு நடிகை ஜனனி ஐயர், மும்தாஜ் மற்றும் தற்போது பிக்பாஸ் வீட்டிலிருக்கும் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். காரணம் நடிகர் சத்யா தர்ஷனின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.