ரிலையன்ஸ் நிறுவனம் தான் முதன் முதலில் 501 ரூபாய்க்கு மொபைல் கொண்டு வந்து மொபைல் உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. 501 ரூபாய் மொபைல் வந்த உடன் தான் அனைவரின் கைகளிலும் மொபைல் ஃபோன் பார்க்க முடிந்தது.
அந்த 501 ரூபாய் காலம் முடிந்த உடன் தற்போதைய ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் லேட்டஸ்ட் டெக்னாலஜி படி 1 ஜீபி 300 ரூபாய்க்கு கொடுக்கப்பட்டு கொண்டிருந்த பேக்கை மாற்றி மாதம் 300 ரூபாய்க்கு ஃப்ரீ கால் தினமும் 1 ஜிபி டேட்டா என அறிவித்தது.
இந்த நிலையில் புதிதாக இந்த நிறுவனம் 100 எம்.பி டேட்டாவை 1 ரூபாய்க்கு கொடுக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
10 ரூபாய்க்கு 1 ஜிபி என்ற முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.