இயக்குனர் இமயம் பாலச்சந்தரின் பிரேமாலயா நிறுவனம் தயாரித்து பாலச்சந்தர் இயக்கி வெளியிட்ட படம் வறுமையின் நிறம் சிவப்பு கடந்த 1980 ம் ஆண்டு 6.11.1980 தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக வெளியான படம் இது.
இப்படத்தில் கமல், ஸ்ரீதேவி, பிரதாப், எஸ்.வி சேகர், திலீப் ஒரு விரல் கிருஷ்ணாராவ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
படித்து விட்டு வேலை தேடும் நான்கு இளைஞர்களும் அவர்கள் படும் துயரமும்தான் கதை . இவர்களுக்கு உதவி செய்ய வரும் பெண்ணாக ஸ்ரீதேவி நடித்திருந்தார்.
இறுதியில் எந்த வேலை வேண்டுமானாலும் செய்யலாம் கெளரவம் பார்க்க கூடாது என்ற அடிப்படையில் கருத்து இப்படத்தில் சொல்லப்பட்டிருந்தது.
வறுமையின் கொடுமையை படத்தின் தலைப்பிற்கேற்ப அழகாக சொல்லி இருந்தார் இயக்குனர். சிப்பி இருக்குது, ரங்கா ரங்கய்யா, தீர்த்தக்கரையினிலே, பாட்டு ஒண்ணு பாடு தம்பி உள்ளிட்ட பாடல்கள் வரவேற்பை பெற்றன.
சினிமா வரலாற்றில் நிலைத்து நின்றுவிட்ட இந்த படத்தின் 40ம் ஆண்டு விழாவை கமல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.