நேற்றுடன் 19வது ஆண்டை நிறைவு செய்யும் ஆளவந்தான்

நேற்றுடன் 19வது ஆண்டை நிறைவு செய்யும் ஆளவந்தான்

கமலஹாசன் நடிப்பில் கடந்த 2001ல் வெளிவந்த திரைப்படம் ஆளவந்தான். கமல் இரட்டை வேடங்களில் நடித்து வெற்றி பெறாத படம் என்று இந்த படத்தை சொல்லலாம். கமல்ஹாசனின் நடிப்பு பேசப்பட்டது படத்தில் அதுவரை இல்லாத அளவு மிக பிரமாண்டமாக இருந்தது.

க்ளைமாக்ஸ் காட்சியில் மயிர்க்கூச்செறியும் சண்டைக்காட்சிகள் இருந்தது. சங்கர் எஹசான் லாய் என்ற மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைத்தனர். இதில் சங்கர் என்பது தமிழ் சினிமா பின்னணி பாடகர் சங்கர் மஹாதேவன் ஆவார்.

உன் அழகுக்கு தாய் பொறுப்பு, ஆளவந்தான், ஆப்பிரிக்கா காட்டுப்புலி, கடவுள் பாதி மிருகம் பாதி போன்ற பாடல்கள் இப்படத்தில் புகழ்பெற்ற பாடல்களாக விளங்கின.

இப்படம் மிக பிரமாண்ட படம் என பேசப்பட்டாலும் படத்தை தயாரித்த கலைப்புலி தாணுவுக்கு கடும் நஷ்டத்தை கொடுத்த படம். இப்படம் வெளிவந்து சில நாட்களில் கலைப்புலி தாணு கமலஹாசனை கடுமையாக பேசி குமுதம் இதழில் பேட்டி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.