’பாரதிராஜா சார் என் மேலே அளவு கடந்த பிரியம் வைச்சிருக்கிறதுக்குக் காரணம், என்னோட இயல்பான தன்மை.
16 வயதினிலே – படம் தயாரிப்பில் இருக்கும்போது கிட்டத்தட்ட முடியற சூழ்நிலை. இன்னும் உச்சக்கட்டம் மட்டும் தான் படம் பிடிக்க வேண்டியது பாக்கி.
மத்ததை எல்லாம் முடிச்சாச்சி. வியாபாரம் ஆகலை. வந்து பார்த்த விநியோகஸ்தர்கள் எல்லாம் வாங்கலை.அப்ப.. அந்தச் சூழலில் தான் நான் போய்க் கதை கேட்கிறேன். எனக்குக் கதை பிடிச்சது.
புடிச்ச உடனே வடஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு, என்.எஸ்.சி. பகுதி. அப்ப அது தான் பெரிசு. அதோட விநியோக உரிமையை வாங்கினேன்.
கதை கேட்டு முடிஞ்சவுடனே பேசி முடிவு பண்ணுனதுனாலே பாரதிராஜாவாலே அதை நம்ப முடியலை.
ஏன்னா.. அதுக்கு முந்திப் பலருக்கும் கதை சொல்லப்பட்டு அதைக் கேட்டுட்டு ‘’அய்ய.. இது ஓடாதுய்யா.. என்னய்யா.. கமலஹாசன் ஒரு விளையாட்டுப் பையன் மாதிரி நடிச்சிக்கிட்டிருந்தவரு. அவரைப் போயி இப்படி வெத்திலை, பாக்கு போட வைச்சு, முடிய அசிங்கப்படுத்திக் கேவலப்படுத்தியிருக்கேய்யா.. என்னத்த ஓடும்?’’ –இப்படின்னு சொன்னாங்களாம்.
நான் போய்க் கதையைக் கேட்டு முடிச்சிட்டு பிரமாதமா இருந்துச்சின்னு கை கொடுத்து வியாபாரம் பேசலாம்னதும் அவருக்கு ஆச்சர்யம் தாள முடியலை.
‘’என்ன காதர்.. நெசமாத் தான் சொல்றீங்களா? நெசமாத் தான் படம் பிடிச்சிருக்கா? நெசமாத் தான் வாங்குகிறீங்களா? எனக்கு ஒண்ணுமே புரியல. அப்படின்னாரு..
‘’படத்தில் ஒரு அடிப்படையான கருத்தைச் சொல்லியிருக்கீங்க.. ஆளைப் பார்க்காதே.. ஆடையைப் பார்க்காதே. மனசைப் பாரு.. இது கிராமத்திலயிருந்து பட்டணம் வரைக்கும் எல்லோருக்கும் தேவையான கருத்து.
இது எல்லா ஜனங்களோட மனசுக்கும் தெரிஞ்ச விஷயம். அதனாலே இந்தக் கருத்து ஜெயிக்கும். எனக்கு நம்பிக்கை இருக்கு. அதனால நான் வாங்கிறேன்னேன்.
கட்டிப்பிடிச்சிக்கிட்டாரு.
ஆக – அன்னைக்கு ஆரம்பிச்சது என்னோட பழக்கம்.
பாரதிராஜா மாதிரி இன்னைக்கி நகரத்திலே இருக்கி 90 % பேர் கிராமத்திலே இருந்து வந்தவங்க தான். அவங்களாலே பட்டணத்துக்காக வாழ்க்கை முறைகளை மாத்திக்க முடியாது.
கிராமத்தானாகவே வாழ்ந்துக்கிட்டிருக்கோம் எல்லோரும்.
அதனால இது இயல்பா அமையுற விஷயம்!’’
என ராஜ்கிரண் கூறியுள்ளார்.