Corona status in TN and india
Corona status in TN and india

இன்று ஒரே நாளில் 168 பேர்! கொரோனா எண்ணிக்கை அதிகமாகும் அரியலூர்!

அரியலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 168 பேர் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த மாவட்டங்களில் அரியலூரும் ஒன்றாக இருந்தது. அங்கு நேற்றுவரை 8 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சையில் 4 பேர் குணமாகி வீடு திரும்பினர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அடுத்த அதிர்ச்சியாக கிட்டதட்ட 2500 பேருக்கும் மேல் அரியலூரில் இருந்து கோயம்பேடு மாவட்டத்தில் வேலைப் பார்ப்பது கண்டறியப்பட்டது. இது கோயம்பேடு மார்க்கெட்டின் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு மடங்கு என சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர்கள் அனைவரும் அரியலூருக்கு அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு கொரோன சோதனை மேற்கொள்ளப்படுகின்றனர்.

இந்நிலையில் இன்று மட்டும் 168 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே 34 பேருக்குக் கொரொனா இருந்த நிலையில் இப்போது எண்ணிக்கை 202 ஆக உயர்ந்துள்ளது.