16ம் வருடத்தில் ஆட்டோகிராஃப்

45

சேரன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஆட்டோகிராஃப். இந்த திரைப்படம் கடந்த 2004ம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும் . 2004ல் காதலர் தினமான பிப்ரவரி 14ல் இப்படம் ரிலீஸ் ஆனது.

சேரன் இயக்கிய மிக தரமான படத்தில் இதுவும் ஒன்று. பள்ளிக்கால, கல்லூரி கால நினைவுகளையும் , காதல் நினைவுகளையும் அழகாய் படமாக்கி இருப்பார் சேரன்.

தனது திருமண பத்திரிக்கையை கொடுப்பதற்காக தனது பள்ளி வாத்தியார், பள்ளிக்கூட தோழி, உள்ளிட்டோரை சந்திப்பதற்காக செல்லும் கதையில் ப்ளாஷ்பேக் விரிந்து செல்லும்.

அழகிய பசுமைக்கால நினைவுகளை நினைவுபடுத்தும் இந்த படம் மிகச்சிறந்த படமாக அமைந்தது.

அனைவராலும் பாராட்டப்பட்டது. கோபிகா, கனிகா, சினேகா உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தில் இடம்பெற்ற சித்ரா அவர்கள் பாடிய ஒவ்வொரு பூக்களுமே பாடல் அவருக்கு தேசிய விருதை பெற்றுக்கொடுத்தது.

தமிழ் சினிமா உலகின் மிகச்சிறந்த படைப்பாக இப்படம் இன்றும் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் இப்படம் வந்து 16 வருடம் ஆகும் நிலையில் சேரன் வெளியிட்டுள்ள அறிக்கை.

17 வருடங்கள் ஆனாலும் இன்னும் ஆட்டோகிராப் திரைப்படத்தை புதிய படமாக ரசித்துப்பார்க்கும் ரசிகர்களுக்கும், ஆட்டோகிராப் சாயலில் வரும் புதிய படங்களோடு ஒப்பிட்டு பார்க்கும் விமர்சகர்களுக்கும் பத்திரிக்கை, ஊடக மற்றும் வளைதள நண்பர்களுக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

பாருங்க:  3 தொகுதிகளில் இடைத்தேர்தல் : திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு முடிந்தது
Previous articleசசிக்குமார் நடிக்கும் ராஜவம்சம் வெளியீட்டு தேதி
Next articleபிரபுதேவாவின் பஹீரா டீசர்