15 வருடத்தை கடந்த பருத்தி வீரன் – அனைவருக்கும் நன்றி தெரிவித்த கார்த்தி

15 வருடத்தை கடந்த பருத்தி வீரன் – அனைவருக்கும் நன்றி தெரிவித்த கார்த்தி

கடந்த 2007ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி வெளியான படம் பருத்தி வீரன். அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி அறிமுகமான படம் இது.

அதுவரைக்கும் சூர்யாவின் தம்பியாக பெரும்பாலும் அறியப்படாதவராக இருந்த கார்த்தி பருத்தி வீரன் என்ற ஒற்றைப்படம் மூலம் பட்டி தொட்டியெல்லாம் தெரிந்த நபரானார்.

அதற்கு முன்பே பிரியாமணி கதாநாயகியாக நடித்திருந்தாலும் இந்த படமே அவருக்கு பெரிய பெயரை வாங்கி கொடுத்தது. பிரியாமணிக்கு தேசிய விருதையும் வாங்கிக்கொடுத்தது இப்படம்.

யுவனின் இசையில் அனைத்து பாடல்களும் மாஸ் ஹிட் ஆனது. குறிப்பாக ஊரோரம் புளியமரம் என்ற பாடல் மிகப்பெரும் ஹிட் ஆனது எனலாம்.

இப்படம் வந்து இன்றுடன் 15 வருடத்தை நெருங்குவதால் தன்னை இந்த சினிமா இண்டஸ்ட்ரிக்குள் நுழைத்து வெற்றியை கொடுத்த இயக்குனர் அமீர். பருத்தி வீரன் பட தயாரிப்பாளர் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா மற்றும் ரசிகர்கள் தன் வளர்ச்சிக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார் கார்த்தி.