Latest News
14 ஆண்டுக்கு பின் வடபழனி முருகன் கோவிலில் கும்பாபிசேகம்- இன்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி
தமிழகத்தில் ஊரடங்கு மற்றும் வெள்ளி , சனி ஞாயிறு மூன்று நாட்கள் கோவில் அடைப்பு போன்ற காரணத்தால் பல கோவில்கள் மீண்டும் மூன்று நாட்களுக்கு பின் இன்று திறக்கப்படுகிறது.
நேற்று சென்னை வடபழனி முருகன் கோவிலில் கும்பாபிசேகம் நடைபெற்றது.
கடந்த 2007ம் ஆண்டுக்கு பின் 14 ஆண்டுகளுக்கு பின் இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சென்னைவாசிகள் அனைவருக்குமே விருப்பமான முருகன் கோவில் என்பதாலும் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் கூட்டம் சேர்ந்து விடக்கூடாது என்பதால் பக்தர்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று முதல் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
கும்பாபிஷேகம் நடந்த கோவில் என்பதால் இன்று முதல் பக்தர்கள் கூட்டம் அதிகம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
