உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,24,344ஆகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 12,39,900ஆகவும் உள்ளது.
இதனையடுத்து, தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4000ஐ தாண்டியுள்ளது. இதனால் தமிழக அரசு அத்தியாவாசிய பொருட்களை தவிர்த்து, கல்வி நிலையங்கள் முதல் கேளிக்கை மால்கள் வரை தற்போதைக்கு மே 17வரை முடக்கக்கியுள்ளது. அதனால் தமிழகத்தில் 10, +11 மற்றும் +12 வகுப்புக்கான பொது தேர்வுகளும் தற்போதைக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் தொடங்கிய பதினொன்றாம் வகுப்புகான பொதுத்தேர்வில், ஒரே ஒரு தேர்வு மட்டும் நிலுவையில் உள்ளதால், அந்த ஒரு தேர்வு ரத்து செய்யப்படுமோ? என்ற கேள்விகள் ஏழுந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்: 11-ம் வகுப்புக்கு எஞ்சியுள்ள ஒரு தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது என்றும், கொரோனாவுக்கு தீர்வு கண்டவுடன் 11-ம் வகுப்புக்கு எஞ்சியுள்ள ஒரு தேர்வு எப்போது என அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.