10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மே மாதம் நடக்கும் என அறிவிக்கபப்ட்ட நிலையில் இப்போது பாடம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக ஆரம்பித்துள்ளன.
கொரோனா காரணமாக தமிழகத்தில் அனைத்து தொழில்களும், தொழிலாளர்களும் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். கல்வி நிலையங்களுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது. இதனால் தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை உருவானதால் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. இதனால் மார்ச் 27 ஆம் தேதி தொடங்க இருந்த 10 ஆம்வகுப்பு தேர்வுகள் தடைபடடன.
இந்நிலையில் இன்னும் நடத்து முடிக்கப்படாமல் இருக்கும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்குமா என கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் தமிழக முதல்வர் கண்டிப்பாக தேர்வுகள் நடத்தப்படும் என அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் மாணவர்கள் பயனடையும் வகையில் 10-ஆம் வகுப்பு பாடங்கள் கல்வி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. இன்று முதல் தூர்தர்ஷன்(பொதிகை) தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

