இந்தியாவில் கொரொனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே செல்கிறது. இதனை தொடர்ந்து தமிழக அரசு 144 ஊரடங்கு உத்தரவை வரும் மே 3ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா? என்ற சந்தேகம் வலுவடைந்தது கொண்டே இருக்கின்றது. தமிழகத்தில் ஏற்கனவே 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக, பத்தாம் வகுப்பு தேர்வுகள் குறித்து நீடித்திருந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை என்றும், ஒத்திவைக்கப்பட்டு மட்டுமே உள்ளது என்றும், மறுதேதி ஆலோசனைக்கு பிறகு அறிவிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.