திரையரங்குகள் 100 சதவீத இருக்கை- நீதிமன்றத்தில் வழக்கு

60

கொரோனா ஊரடங்குக்கு பின் கடந்த நவம்பர் 10ம் தேதிதான் தியேட்டர் திறக்கப்பட்டது. இருப்பினும் 50 சதவீத இருக்கைக்குதான் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் விரைவில் பொங்கல் வர இருப்பதையொட்டி மாஸ்டர், ஈஸ்வரன் போன்ற படங்கள் வர இருக்கிறது.

இந்நிலையில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இதற்கு மருத்துவர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் மத்திய அரசும் 100 சதவீத இருக்கை அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் இதற்காக ஒரு வழக்கும் இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது. மனுவாக சமர்ப்பித்தால் நாளைக்குள் விசாரணைக்கு ஏற்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பாருங்க:  தமிழ்நாட்டில் ஏப்ரல் 18 மக்களவை தேர்தல் 2019; தேர்தல் ஆணையம் அறிவிப்பு!