10 மணி நேரம் கழித்து வெளியே வந்த விஜயகாந்த்…

402

அமெரிக்கா சென்றுவிட்டு சென்னை திரும்பிய விஜயகாந்த் பல மணி நேரம் கழித்து விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதன்பின் ஓய்வில் இருந்த அவர் இந்திய மணி நேரப்படி நேற்று முன் தினம் அதிகாலை 2 மணியளவில் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டார். அதன்பின் இன்று அதிகாலை 3 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

அவருடன் பிரமேலதா மற்றும் அவரின் மகன் சண்முகப்பாண்டியன் ஆகியோர் வந்திருந்தனர். ஆனால், இன்று மதியம் 1 மணியளவில் அவர் விமான நிலையத்திலிருந்து தனது இல்லத்திற்கு கிளம்பினார். நீண்ட நேரம் பயணம் செய்ததால், அவர் ஓய்வு எடுத்துவிட்டு தாமதமாக கிளம்பியதாக பிரேமலதா பேட்டியளித்தார்.

பாருங்க:  எஸ்.பிபிக்காக உன்னிமேனன் வெளியிட்டுள்ள வீடியோ