Latest News
கொரோனா காரணமாக 1 நாள் மட்டும் நடக்கும் திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சைக்கு அருகிலேயே உள்ள ஒரு ஊர்தான் திருவையாறு. இங்கு மகான் தியாகராஜரின் ஜீவசமாதி உள்ளது. தமிழ் இசைக்கு ஏற்றவாறு பல கீர்த்தனைகளை இயற்றி கொடுத்த மகான் இவர்.
இவரது சமாதியில் இசைக்கலைஞர்கள் அனைவரும் வந்து வழிபடுவது வழக்கம். இவரது ஆராதனை விழா வருடா வருடம் தை மாதத்தில் திருவையாற்று காவிரி கரையில் நடைபெறும்.
5 நாட்கள் நடைபெறும் இந்த விழா கடந்த சில வருடங்களாகவே கொரோனா காரணமாக கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடந்து வருகிறது.
இந்த வருடம் விழா நடைபெறுகிறது 5 நாட்களுக்கு பதிலாக இன்று 1 நாள் மட்டும் விழா நடைபெறுகிறது.
இன்று தியாகராஜரின் 175வது ஆராதனை விழா அனுசரிக்கப்படுகிறது.
