ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018 மே மாதம் பொது மக்களிடையே போராட்டம் வெடித்தது. அதனை கண்டித்து போலீஸாரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது, தமிழகத்தில் பெரும் பரபரப்பை மற்றும் மக்களிடையே ஆவேசத்தை ஏற்படுத்தியது.

இந்த போராட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அரசாணை வெளியிட்டது. அதனால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தது. சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசியப் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து மீண்டும் போராட்டம் வெடித்த நிலையில் உச்ச நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.

இதையடுத்து நேற்று இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தீர்ப்பு வழங்கியது.மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.