வேட்பாளர் விருப்ப மனுவை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம்; மக்கள் நீதி மய்யம்

261
வேட்பாளர் விருப்ப மனுவை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம்

மக்களவை தேர்தலுக்காக, வேட்பாளர் விருப்ப மனு இன்று முதல் சென்னை மற்றும் பொள்ளாச்சி தலைமையகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.

18 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் விருப்ப மனு பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுவை மார்ச் 16ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விருப்ப மனுவுடன் 10,000 ரூபாய் காசோலையை MAKKAL NEETHI MAIYAM என்ற பெயரில் எடுத்து அனுப்பலாம்.

www.maiam.com என்ற கட்சி இணையத்தலத்திலும் maiam connect செயலி மூலாகவும் விருப்ப மனுவை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

பாருங்க:  கொரோனாவால் பாதிக்கப்பட்ட 74 வயது மூதாட்டி பூரண குணம் ! தமிழக மருத்துவர்கள் சாதனை!