காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கலில், பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. அங்கு, வருடம் தோரும் வெளிநாட்டில் இருந்து பறவைகள் வருவது வழக்கம்.
ஆஸ்திரேலியா, இலங்கை, பர்மா, பாகிஸ்தான், மியாமர், பங்களாதேஷ் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து வர்ண நாரை, சாம்பல் நாரை, அரிவால் மூக்கன், வெள்ள நிற அரிவால் மூக்கன், முக்களிப்பான், கூழைக்கடா, பாம்புதாரா, சிறவி உள்ளிட்ட 24 வகையான பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வேடந்தாங்கல் வந்து செல்வது வழக்கம்.கடந்த ஆண்டு பருவ மழைக் குறைப்பாடு காரணமாக,வேடந்தாங்கல் ஏரியில் நீர் வற்றியதால், அங்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அந்த ஏரியில் சுமார் 30 சதவீதம் நீர் மட்டுமே உள்ளது. அதனால் பறவைகள் வருகையின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
ஆண்டுதோறும், அக்டோபர் முதல் ஜூன் மாதம் வரை சுற்றுலா பயணிகளுக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
ஆனால், இந்தாண்டு பறவைகளின் வருகை குறைந்து வருவதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.இதனால், பறவைகள் சரணாலயத்தை மூடக்கோரி, பொது மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.