துபாயில் இருந்து முதல் விமானம்! சென்னை வந்தடைந்த 182 பேர்!

361

வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் சென்னை வரும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சிறப்பு விமானம் நேற்றிரவு தமிழகம் வந்து சேர்ந்தது.

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை சொந்த நாட்டுக்கு அழைத்து வரும் பொருட்டு, சிறப்பு விமானங்கள் மே 7 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளன. இதையடுத்து அதற்காக அறிவிக்கப்பட்டுள்ள இணையதளங்களில் முன் பதிவு செய்தவர்கள் அழைத்து வரப்பட உள்ளனர்.

தமிழகம் திரும்ப அனுமதி பெறுவதற்கென உருவாக்கப்பட்ட இணையதளத்தில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து நேற்று முதல்கட்டமாக சென்னை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை (நேற்று) நள்ளிரவு 1 மணி அளவில் தரையிறங்கியது. அதில் 182 அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அவா்கள் அனைவருக்கும் வெப்பமானி மூலமாக உடலின் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. மேலும் அவா்களது ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவர்களை வீடுகளிலோ அல்லது விடுதிகளிலோ தனிமைப்படுத்திக் கொள்ளுமபடி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாருங்க:  ஆக்சிஜன் தடைபட்டு நோயாளிகள் இறந்த விவகாரம்- ஸ்டாலின் கடும் கண்டனம்
Previous articleதனுஷ் படங்களிலேயே பட்டாஸ்தான் நம்பர் 1 – தொலைக்காட்சியில் புதிய சாதனை!
Next articleபாட்டிலில் கிடந்த தவளை – மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!