வெப்பநிலை 5 முதல் 9 டிகிரி வரை உயரும் – சென்னை வானிலை மையம்

440

தமிழகத்தில் சில நாட்களில் வழக்கத்தை விட 9 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 104 டிகிரி வரை வெப்பம் தாக்கி உள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெப்பத்தின் வாட்டம் அதிகரித்து வருகிறது.அடுத்து வரும் நாட்களில் திருவள்ளூரில் வெப்பநிலை 9 டிகிரி ஃபாரன்ஹீட் வரை தாக்கம் இருக்கும் என எச்சரித்து உள்ளது.

இது குறித்து, வானிலை மையம் கூறியதாவது : தமிழகத்தின் உள் பகுதியில் கிழக்கு திசை காற்று வலுவாக வீசாததால், அங்கு வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரித்து வருகிறது.அதன் விளைவாக அடுத்து வரும் சில தினங்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களான வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், கரூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட சுமார் 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயர்ந்திருக்கும்.

அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் வழக்கத்தை விட 9 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது, என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பாருங்க:  புகைப்படத்தை வெளியிட்டு தயாரிப்பாளர்களிடம் மன்னிப்புக் கேட்ட அஜித் பட நடிகை!