வண்டலூர் கிளாம்பாக்க பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரை

வண்டலூர் கிளாம்பாக்க பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரை

இந்திய நாட்டை ஆளக்கூடிய தகுதிமிக்க ஒரே பிரதமர் நரேந்திர மோடி தான் என புகழாரம்.மேலும், அவர் செய்த நலன்களான, ஏழை எளிய மக்களுக்கு நிதியுதவி திட்டம், இராணுவ அதிகாரியை மீட்டது போன்ற அனைத்தையும் சுட்டிக் காட்டியதோடு, 130 கோடி மக்களின் பாதுகாப்பை வழி நடத்தி செல்ல கூடிய தகுதி நம் பிரதமர் ஒருவருக்கு மட்டுமே உள்ளது என புகழாரம் சூட்டினார்.

தமிழக முதல்வரின் கோரிக்கைகள்:

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 2வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை மேம்படுத்த கோரிக்கை.

கோதாவரி-காவேரி இணைப்பு திட்டத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

ஏழை தொழிலாளிகளுக்கு 2000 ரூபாய் கொடுக்கும் திட்டத்தை எதிர்த்து திமுக, வழக்கு தொடர்ந்தது.ஏழை மக்களுக்கு நிதியிதவி வழங்குவது தவறா? என கேள்வி எழுப்பினார்.
40 மக்களவை தொகுதிகளிளும் அதிமுக கூட்டணி பிராமாண்ட வெற்றி பெறும் எனக் கூறி உரையை முடித்தார்.