லிப்ஃட் கொடுக்க மறுத்த வாலிபர் கொலை – இருவர் கைது!

391

அரக்கோணம் அருகே லிஃப்ட் கொடுக்க மறுத்த நபர் அடித்து கொலை செய்யப்பட விவகாரத்தில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்துள்ள கீழ் ஆவதம் எனும் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் கடந்த 12ம் தேதி மோட்டர்சைக்கிள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த இருவர் அவரிடம் தங்கள் இருவரையும் மின்னல் கிராமத்தில் விட்டு விடும் படி கேடுள்ளனர். அவர்கள் இருவரும் மது அருந்தி இருந்ததால், லிப்ஃட் கொடுக்க தட்சிணாமூர்த்தி மறுத்து, அப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.

அப்போது அவர்கள் இருவரும் தட்சணாமூர்த்தியை கடுமையாக தாக்கியதுடன், அருகிலிருந்த கல்லை எடுத்து அவரின் தலையில் போட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த தட்சணாமூர்த்தியை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கன்வே உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இந்த கொலையை கண்டித்தும், கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் கீழ் ஆவதம் கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அந்த பகுதியில் இருந்த சிசிவிடி கேமராப்பதிவுகள் மூலம் தட்சணாமூர்த்தியை கொலைசெய்த வினோத் மற்றும் பார்த்திபனை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது ஏற்கனவே 3 கொலை வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.

பாருங்க:  16 வயது சிறுமிக்கு 23 வயது வாலிபருடன் திருமணம் - தடுத்து நிறுத்திய போலீஸ்