லலிதா ஜுவல்லரி நகை கொள்ளை – கொள்ளை அடித்தது யார் தெரியுமா?

130
Trichy

திருச்சி லலிதா ஜூவல்லரியில் நகைகளை கொள்ளையடித்த கும்பலை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

சமீபத்தில் திருச்சியில் உள்ள பிரபல லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை முகமுடி அணிந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். கடையின் பின்புறம் உள்ள சுவற்றில் துளையிட்டு அவர்கள் இந்த திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். இதில் தொடர்புடையவர்கள் வடமாநில கொள்ளையர்கள் என முதலில் செய்திகள் வெளியானது.

lalitha jewellery

தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, கையில் பையுடன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை போலீசர் பிடித்தனர். அதில் ஒருவன் தப்பி ஓடுவிட ஒருவன் மட்டும் சிக்கிக் கொண்டான். அந்த பையில் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் இருந்தன. மணிகண்டனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் 8 பேர் கொண்ட கும்பலை வைத்து இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாருங்க:  உள்ளூர் விமானம் முலம் கர்நாடகம் போறீங்களா?? அப்போ 7 நாள்கள் தனிமை கட்டாயம்!