லஞ்சம் கொடுக்காமல் தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் பெற முடியாத நிலை!

299
லஞ்சம் கொடுக்காமல் சான்றிதழ் பெற

லஞ்சம் கொடுக்காமல் தாலுகா அலுவலகங்களில் எந்த சான்றிதழும் பெற முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளதாகவும், ஊழல் நாடு முழுவதும் புற்று நோய் போல பரவி வருவதாகவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தாலுகா அலுவலகங்களில் அடிக்கடி சோதனை செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்பு துறைக்கு உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.தர்மபுரி மாவட்டத்தில், நிலம் கையகப்படுத்தல் பிரிவு சிறப்பு தாசில்தார் தர்மராஜ், ஊழல் குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்திரவுக்கு உயர் நீதிமன்றத்தில் எதிர் மனு தாக்கல் செய்தார் தர்மராஜ்.

அப்போது, 2016ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட லஞ்ச வழக்கின் அடிப்படையில், தனது பதவி உயர்வை தடுக்கும் நோக்கில் 2018 அக்டோபரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், நீதிபதி பணி நீக்கம் தண்டனையின் கீழ் வராது என கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இதனால், நீதிபதிகள் தாலுகா அலுவலகத்தில் அடிக்கடி திடீர் சோதனை மேற்க்கொள்ள வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பாருங்க:  வாக்களிப்பு அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி!