ரூ.66 ஆயிரம் கள்ள நோட்டுகளுடன் பெண் எம்.பி.ஏ பட்டதாரி கைது!

422

கடலூர் பேருந்து நிலையத்தில் நேற்று ஒரு பை முழுவதவும் கள்ள நோட்டுகளுடன் இளம் பெண் எம்.பி.ஏ பட்டதாரி சிக்கினார்.சிதம்பரத்தை சேர்ந்த அந்த பெண், நேற்று கடலூர் பேருந்து நிலையத்தில் ஒரு பழக்கடையில் பழம் வாங்கி விட்டு தன்னிடம் இருந்த 2000 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லரை கேட்டுள்ளார்.
நோட்டை வாங்கிய பழ வியாபாரிக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

ஏனெனில், அந்த நோட்டு பேப்பரைப் போல் இருந்து உள்ளது. உடனே அந்த பெண்ணை பார்த்து பழ வியாபாரி கேள்வி கேட்க, பழத்தை வாங்காமல் அந்த பெண் ஓட்டம் பிடித்துள்ளார், உடனே அங்கிருந்தோர் சத்தம் போட ஒரு பேருந்தில் ஏறியுள்ளார் அந்த பெண்.

பிறகு, போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர், உடனே போலீஸார் அந்த பெண்ணை சுற்றி வலைத்து பிடித்தனர்.
விசாரணையில், அந்த பெண் பரணிகுமாரி(32) , எம்.பி.ஏ பட்டதாரி, சிதம்பரத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. தனக்கு படித்ததற்கான வேலை கிடைக்கவில்லை என்றும், கடன் தொல்லை காரணமாக கள்ள நோட்டு அடிக்க முடிவு செய்து, யூடியூப் பார்த்து கற்று கொண்டதாகவும் கூறியுள்ளார்.

அவரிடம் இருந்து 33 2000 ரூபாய் நோட்டுகளையும், 5 500 ரூபாய் நோட்டுகளையும், 6 200 ரூபாய் நோட்டுகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பாருங்க:  பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் தர்ஷன்? - அதிர்ச்சி செய்தி