ரூ. 2 ஆயிரம் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது – நீதிமன்றம் அதிரடி!

377

ஏழை மக்களுக்கு  ரூ.2 ஆயிரம் உதவி தொகை வழங்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கஜா புயல் மற்றும் பருவமழை பெய்ததால் ஏழை மக்கள் குறிப்பாக விவசாய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு, வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அறிவித்தார். அந்த பணத்தை பெறுவதற்கான விண்ணப்பங்களும் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பஞ்சாயத்து சார்பில் செந்தில் ஆறுமுகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறிய நீதிபதிகள், இந்த திட்டம் அரசின் கொள்கை முடிவு. எனவே, இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி, 2 ஆயிரம் திட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

பாருங்க:  அம்மா உணவகங்களில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இலவச உணவு!