ராஜீவ் காந்தி கொலை வழக்கு

ராஜீவ் காந்தி கொலை வழக்கு; மனித சங்கிலி போராட்டம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிக்கக் கோரி மனித சங்கிலி போராட்டம் நடைப்பெற்றது.

பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால், அதை தொடர்ந்து 6 மாத காலமாகியும் நிறைவேற்றாததைப் பற்றியும், ஆளுநர் உடனடியாக அந்த கோப்பில் கையெழுத்து இட்டு அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரி மனித சங்கிலி போராட்டம் நடைப்பெற்றது.

இப்போராட்டத்தில், விசிக கட்சி தலைவர் திருமாவளவன், நடிகர் சத்தியராஜ், பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் உள்ளிட்டோர் ஈடுப்பட்டனர்.சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து அண்ணாசாலை வரை இந்த மனித சங்கிலி போராட்டம் நடைப்பெற்றது.மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, புதுச்சேரியிலும் நடைப்பெற்றது.