யுடியூப் விமர்சகர் பிரசாந்தை ‘போடா முட்டாள்’ என திட்டிய ஜோதிமணி..

472

பிரபல தமிழ் சினிமா யுடியூப் விமர்சகர் பிரசாந்தை கரூர் எம்.பி. ஜோதிமணி திட்டிய விவகாரம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் நிதியை பெறுவதற்கு அனுமதி வழங்கியதில் ரூ.305 கோடி அளவில் நிதி மோசடி நடந்ததாக எழுந்த புகாரில் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

இந்த விவகாரம் தமிழக மற்றும் தேசிய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பிரபல தமிழ் சினிமா யுடியூப் சிமா விமர்சகர் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘தெய்வம் நின்று கொல்லும். ஈழத் தமிழர் கதறிய போது இங்கே அதிகார போதையில் அகங்காரமாய் சுற்றிய அத்தனை பேரையும் தெய்வம் நிச்சயம் நின்று கொல்லும்.’ என பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து கரூர் எம்.பி. ஜோதிமணி ‘போடா முட்டாள்’ என பதிவிட்டிருந்தார். இதை ஸ்கீன் ஷாட் எடுத்து பிரசாந்த் பதிவிட்டிருந்தார். ஆனால், என் ஐடியை யாரோ போர்ஜரி செய்து அப்படி பதிவிட்டுள்ளனர். என ஜோதிமணி மறுப்பு தெரிவித்தார். ஆனால், அது உங்கள் ஐடிதான். நீங்கள் பலமுறை இதுபோல் டிவிட் செய்துவிட்டு டெலிட் செய்துள்ளீர்கள்.. ஏன் பொய் சொல்கிறீர்கள்? என நெட்டிசன்கள் ஜோதிமணியிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாருங்க:  ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி கோலாகலம்!