Connect with us

யாருக்கு ஓட்டு போட போறிங்க? கமல் ஆவேசப் பேச்சு!

யாருக்கு ஓட்டு போட போறிங்க

Tamil Flash News

யாருக்கு ஓட்டு போட போறிங்க? கமல் ஆவேசப் பேச்சு!

நம் விழியில் எரியும் கோபம், நம் விரல்களில் வெடிக்கட்டும்! #டார்ச்லைட்

மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல், முதல்கட்ட தேர்தல் நடைபெற்று கொண்டு வர நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தீவிர பிராச்சாரத்தில், பல தேர்தல் கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல், முதல்கட்ட தேர்தல் நடைபெற்று கொண்டு வர நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தீவிர பிராச்சாரத்தில், பல தேர்தல் கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஆவேசமாக பேசி ஒரு வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில், டிவி பார்த்து கொண்டிருக்கும் கமல், ஸ்டாலின், மோடி, எச்.ராஜா, ஓ.பி.எஸ் ஆகியோரின் பிரச்சார குறள்களை கேட்டு, டிவி ரிமோட்டை தூக்கி போட்டு டிவியை உடைத்து ஆவேசமாக பேசினார்.

யாருக்கு ஓட்டு போட போறிங்க?

‘குடும்ப அரசியல் என்ற பேர்ல நாட்டையே குழி தூண்டி புதைச்சாங்கலே’ அவங்களுக்கா?
இல்ல, ‘நம்ம உரிமைக்காக போராடும் போது அடிச்சி துரத்துனாங்கலே’ அவங்களுக்கா ?
‘நலத்திட்டம் என்ற பேர்ல, நிலத்தையே நாசமாக்கி விவசாயிகளை அம்மனமாக்கி நாட்டையே தலைகுனிய வெச்சாங்கலே’ அவங்களுக்கா? இல்ல, ‘கார்ப்பெரேட்டுக்கு கைக்கூளியா மாறி நம் மக்களயே சுட்டு கொண்ணாங்கலே’ அந்த ஐயோக்கிய அரசுக்கா ?

யாருக்கு ஓட்டு போட போறிங்க? நீ என்னடா சொல்றது? நான் எங்க அம்மா அப்பா சொல்றவங்களுக்கு தான் ஓட்டு போடுவேன்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது.
கரக்ட் , அம்மா அப்பா சொல்றத கேட்கனும், ஆனால், எந்த அம்மா அப்பா சொல்றத கேட்கனும் என்றத நான் சொல்றன் கொஞ்சம் கேளுங்க. “நம் அரசாங்கம் நீட் தேர்வு என்ற பேர்ல, ஒரு பொன்ன கொண்ணாங்கலே அவங்க அம்மா அப்பா கிட்ட கேட்டு பாருங்க, அவங்க சொல்வாங்க யாருக்கு ஓட்டு போட கூடாதுன்னு”.

நாட்டை ஆள தகுதியே இல்லாத இந்த நாட்டில், அதை தட்டி கேட்கிற ஒருத்தனா, உங்கள ஒருத்தனா கேட்கிறேன். யாருக்கு ஓட்டு போட போறிங்க? ஏப்ரல் 18 குனிந்து கும்பிடாதிர்கள், நிமிர்ந்து ஓட்டு போடுங்கள். “நீங்கள் வெற்றி களம் காணும் நாள், நாங்களும் தான்” என கமல்ஹாசன் ஆவேசமாக பேசிய வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

https://www.youtube.com/watch?v=TTK3LRDyEXE

More in Tamil Flash News

To Top