முடங்கியதா வோடஃபோன் நெட்வொர்க்? பாதிப்பை சரி செய்கிறதா நிறுவனம்?

333
vodafone network problem

பிரபலமான மொபைல் நெட்வொர்க் வோடாஃபோன், இந்தியாவில் பல இடங்களில் முடங்கியுள்ளதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றர்.இந்த நெட்வொர்க் சேவை இரண்டு நாட்களாக சில இடங்களில் சரிவர கிடைக்காததால், வாடிக்கையாளர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இது தொடர்ந்து, பல வாடிக்கையாளர்கள் ட்விட்டரில் வோடஃபோன் நிறுவனத்திடம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.நெட்வொர்க் முடங்கியுள்ள நிலையில், வாடிக்கையாளர் எண்(Customer care number) 198ம் முடங்கியுள்ளது, என புகார் தெரிவித்து வருகின்றர்.

இந்த பாதிப்பு குறித்து பலரும் புகார் தெரிவித்து வந்த நிலையில், அந்த நிறுவனத்திடம் இருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை எனவும் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து, வோடஃபோன் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இது ஒரு தற்காலிக சேவை பாதிப்பு தான். இந்த பாதிப்பை சரி செய்ய எங்களுக்கு சிறிது நேரம்’ ஆகும் என தெரிவித்துள்ளது.

பாருங்க:  அமேசான் புதிய திட்டம்; கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு ஆபத்து!